மாணவ- மாணவிகளுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு

குன்னூர்,:  தமிழக அரசின் முதல் முயற்ச்சியான புதியன விரும்பு மூலம் மாணவ மாணவிகளுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி  நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் கலந்து கொண்டு  வாழ்த்தினார்.தமிழக அரசின் முதல் முயற்ச்சியாக  (புதியன விரும்பு) என்ற பெயரில் கோடை பயிற்சி நீலகிரி மாவட்டத்தில்கடந்த 5 நாட்களாக  நடைப்பெற்றது. இதில் 20 மாவட்டங்களில் இருந்து பிளஸ்-2  மாணவ, மாணவிகள் 1250 பேர் கலந்து கொண்டு 5 மையங்களில் மாணவ மாணவிகள் தங்கி கோடை கால பயிற்சியில் ஈடுபட்டனர்.  இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டது. இந்த  கோடை கால சிறப்பு பயிற்சியில் யோகா, திறன் மேம்பாட்டு பயிற்சி, நான் முதல்வன் என்ற சிறப்பு பயிற்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் எவ்வாறு ஈடுபடுவது? மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ- மாணவிகளை ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று ராணுவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்த கோடை கால சிறப்பு பயிற்சி முடிந்து நிறைவு நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா கலந்து கொண்டு  மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

Related Stories: