1024 குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி

பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆயிரத்து 24  குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூலப்பாரம்  வழிப்பாடு இனத்தில் 22 லட்சத்து 25 ஆயிரத்து 995 ரூபாய் தேவஸ்தானத்திற்கு  வருவாய் வந்துள்ளது. நெய்விளக்கு வழிப்பாட்டில் 13 லட்சம் ரூபாய் வருவாயும்  வரவு வந்துள்ளன. கடந்த ஞாயிறன்று விடுமுதறை நாளில் மட்டும் குருவாயூர்  தேவஸ்தானத்திற்கு 61 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. குருவாயூர்  கோயில் மூலவருக்கு பிம்பசுத்தி கலசாபிஷேகம் நடைபெற்றது. நான்கு  சுத்தி கலசங்களும், தாரயும், பஞ்சதத்துய கலசங்களும் அபிஷேகத்தைத் தொடர்ந்து  25 கலச பூஜைகள் நடைபெற்றன. தந்திரி சேணாஸ் கிருஷ்ணன் நம்பூதிரிப்பாட்  தலைமையில் கலசாபிஷேகப் பூஜைகள் நடந்தன. அன்று இரவு ஸ்ரீபூதபலி பூஜையுடன்  கலசாபிஷே நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

Related Stories: