போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுபான்மையினர் மாணவர்களுக்கு பரிசு

ஈரோடு:  சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஈரோடு  கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கலந்து கொண்டு மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கினார். சென்னை குருநானக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில  சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா  மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் கே.என்.  நேரு, பொன்முடி, சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், கவிஞர் வைரமுத்து,  தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ்,  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், ஈரோடு தெற்கு மாவட்ட  தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு  தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

Related Stories: