தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநாடு

ஈரோடு: ஈரோடு அருகே, எழுமாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. மாணவர்கள்,  இளைஞர்களின் சிலம்பாட்டம், பரதநாட்டியம், கவிதைகளுடன் மாநாடு தொடங்கியது.  ந.கார்த்திகேயன், ஆசிரியை கோ.லதா ஆகியோர் தலைமை வகித்தனர்.  யூனியன் கவுன்சிலர் கு.கவுசல்யா முன்னிலை வகித்தார். தேவதர்ஷினி  வரவேற்றார். சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கலைக்கோவன், கதை சொல்லி  சரிதா ஜோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றும் பேசினர்.இம்மாநாட்டில் மண்பாண்ட கலைஞர்கள், சிலை வடிப்போர் கெளரவிக்கப்பட்டனர். அதைத்  தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ந.கார்த்திகேயன்,  துணைத் தலைவராக சக்திவேல், செயலாளராக முத்துகண்ணன், துணைச் செயலாளராக  த.கார்த்திகேயன், பொருளாளராக லதா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர் மிதுன் நன்றி கூறினார்.

Related Stories: