பைக்கில் மது கடத்திய 2 பேர் கைது

ஈரோடு: பங்களாப்புதூர்  போலீசார் கொண்டையம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்றை தடுத்து  நிறுத்தி சோதனை நடத்திய போது அதில் 17 மதுபாட்டில்கள் இருப்பது  தெரியவந்தது. இதையடுத்து பைக்கில் வந்த கொண்டையம்பாளையம்,  காமாட்சியம்மன்கோயில் வீதியை சேர்ந்த பொன்னுசாமி (40), பாவடி வீதியை சேர்ந்த  பகவதி மகன் கவின்குமார் (27) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் மது  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கினை பறிமுதல் செய்தனர்.

Related Stories: