ஈரோடு கூட்டுறவு அச்சுக்கூட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

ஈரோடு: ஈரோடு மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட (பி.ஈ.14) பணியாளர்களுக்கும்  ஊதிய மற்றும் கோரிக்கைகள் தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தை ஈரோடு  தொழிலாளா் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் நடந்தது. இதில், தொழிற்சங்க  பிரநிதிகளாக தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர்  தங்கமுத்து, அண்ணா பொது தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக தப்பில் கூட்டுறவு சார்பதிவாளர்  பாலாஜி பங்கேற்றார். இதில், அடிப்படை சம்பளம் 1-4-2019ம் ஆண்டில் பெற்று  வந்த அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, இரண்டையும் சேர்த்து புதிய அடிப்படை  ஊதியம், இதனுடன் 15 சதவீதம் உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு, இரு  தரப்பும் ஒப்புக்கொண்டனர். மேலும், ஒப்பந்த சரத்துக்கள், ஊதிய நிர்ணயத்தின்  தொடர்ச்சியாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அரசால் அவ்வப்போது  அறிவிக்கப்படும் அறிவுரைகள் மற்றும் ஆணைகளை நடைமுறைப்படுத்திடவும் ஒப்புதல்  அளித்தனர்.

Related Stories: