1 மாதத்தில் 1907 வழக்கு, ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

காங்கயம்: காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். கடந்த மே மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், தலைக்கவசம்  அணியாமலும், ஓட்டுநர் உரிமம்  இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, முகக்கவசம்  இல்லாமல் இருப்பது உட்பட, பல்வேறு விதிகளை மீறியதாக, 1907 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

Related Stories: