வழிபாட்டு தலம் அமைக்க எதிர்ப்பு மாநகராட்சியில் பொதுமக்கள் தர்ணா

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பொன்முத்துநகர் குடியிருப்பு பகுதியில்  அனைத்து சமூகத்தினரும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சட்டத்துக்கு புறம்பாகவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தனியார் அறக்கட்டளையினர் சிலர் வழிபாட்டுத்தலம் அமைப்பதைக் கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: சமூக நல்லிணக்கத்துடன், வசித்து வரும் எங்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், முறையான கட்டிட அனுமதி பெறாமல் வீடுகட்டுவதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக  வழிப்பாட்டு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக நல்லூர் மண்டல அலுவகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். என்றனர்.இதையடுத்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.  தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Related Stories: