கஞ்சா விற்றவர் கைது

திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: