தி.மு.க. 15 வேலம்பாளையம் பகுதி வட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர்: தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜ் அறிவுறுத்தலின் பேரில், 15 வேலம்பாளையம் பகுதி வட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், அனுப்பர்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ.ராமதாஸ் தலைமை வகித்தார். வடக்கு மாநகர பொறுப்பாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில், வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் சிட்டி வெங்கடாச்சலம், வட்ட கழக செயலாளர்கள் மகேந்திரன், ஸ்ரீதர், சசிக்குமார், அய்யம்பெருமாள், செந்தில்குமார், சண்முகசுந்தரம், ரத்தினசாமி, குட்டிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தி.மு.க.ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: