காணிக்கையாக அளிக்கப்பட்ட கார் ரூ.43 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் காணிக்கையாக வந்த கார் ஏலத்தில் விடப்பட்டதில் 43 லட்சம் ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைத்தது.கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு கார் கம்பெனி சொகுசு கார் ஒன்றினை காணிக்கையாக அளித்தது. காரை பராமரிக்க முடியாத நிலையில், கோயில் நிர்வாகம் சொகுசு காரினை ஏலம் விட முடிவு செய்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஏலத்தில்  அமால் முகமது என்பவர் கலந்து கொண்டு 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு காரினை ஏலத்திற்கு எடுத்தார்.காரின் விலையை விட குறைவான தொகைக்கு கார் ஏலம் விடப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்து சேவா கேந்திரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் முன்னதாக விட்ட ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் மறுஏலம் விடுவதாக அறிவித்தது. நேற்று கோயில் வளாகத்தில் ெசாகுசு கார் மீண்டும் ஏலம் விடப்பட்டது. இதனை வெளிநாட்டு தொழிலதிபரான அங்காடிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் விஜயகுமார் ரூ.43 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். முன்னதாக இந்த ஏலத்தில் 14 பேர் பங்கேற்றனர். ஆனால் முடிவில் சொகுசு காரினை விக்னேஷ் விஜயகுமார் ஏலம் எடுத்தார். மேலும் அதற்கான ஜி.எஸ்.டி., தொகையும் செலுத்தினார். இதனால் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு 43 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Related Stories: