அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நேற்று ஆர்டிஓ அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் மொய்தீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்,தெப்பக் காட்டில் மாயாற்றில் மீது இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணியை மழைக்காலத்திற்கு முன் முடிக்க வேண்டும். மசினகுடி உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தெப்பக் காட்டில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் மாடு மேய்ப்பதற்கு எதிரான தடையை நீக்க அரசு  நடவடிக்கை எடுத்து கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக கூடலூர் மற்றும் பந்தலூர் ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன், செல்வகுமார், ஜான்சன், நகர செயலாளர்கள் செய்யது அனூப்கான், டிஎல்எஸ் ராஜா,பேரூர் செயலாளர்கள் கண்மணி, சந்திரசேகர், ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல், தலைமை கழக பேச்சாளர்கள் ராம்மூர்த்தி, ரவி, ஜலேந்திரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் எம்எல்ஏ ஜெயசீலன், முன்னாள் அமைச்சர் மில்லர்,முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கோரிக்கைகள் குறித்து கூடலூர் ஆர்டிஓவிடம் மனு வழங்கினர்.

Related Stories: