கஞ்சா விற்ற 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு, கனிராவுத்தர்குளம் வில்லரசம்பட்டி சாலையில் ஈரோடு வடக்கு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்தவர்களிடம் சோதனையிட்ட போது, காரில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த வில்லரசம்பட்டி எஸ்எஸ்பி நகரை சேர்ந்த குமார்(20), தென்றல் நகரை சேர்ந்த நவீன்(20) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் 150 கிராம் கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதே போல அந்தியூர் போலீசார் நடத்திய சோதனையில், பவானி, குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த சென்னியப்பன்(58) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: