காவிரியில் மூழ்கி பக்தர் பலி

ஈரோடு: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள சி.கூடலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். விஜயகுமார் தன்னுடைய கிராமத்தில் உள்ள தொம்ப கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக பக்தர்களுடன் நேற்று முன்தினம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்தார். அப்போது விஜயகுமார் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: