வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு: பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடிபுதூர் வஉசி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(32). இவர் மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நிவேதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த ஒருவாரமாக மாதேஸ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த மாதேஸ்வரன் திடீரென்று சுடிதார் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: