குட்கா விற்ற 40 பேர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்கவும், கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தும்படி மாவட்ட காவல்துறை நிர்வாகம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி நேற்று ஈரோடு,பவானி,கோபி,சத்தி,பெருந்துறை ஆகிய 5 சப்.டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பொது இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது மற்றும் குட்கா விற்றதாக 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள், குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: