ஈரோட்டில் ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு: ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக்கோரி ஈரோட்டில் ரயில்வே ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். தென் மண்டல துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில், ரயில்வேயில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். பெண் ரயில் ஓட்டுநர்களுக்கு போதிய வசதிகளை செய்திட வேண்டும். இரவுப்பணியின் படியை பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கிட வேண்டும். பணி பாதுகாப்பினை உறுதி செய்து, வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்திட வேண்டும். ரயில் ஓட்டுநர்கள் பயணப்படியை விதிமுறைப்படி வழங்க வேண்டும். ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிளை செயலாளர் ஸ்ரீஜித், துணை செயலாளர் ஆரதி ஜார்ஜ், டிஆர்இயு மண்டல துணை செயலாளர் பிஜீ, முன்னாள் துணை செயலாளர் முருகேசன் சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தபால் துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி ராமசாமி, மத்திய மாநில அரசு ஊழியர் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: