கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

வேப்பூர், ஜூன் 7:  வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து வரும் மின்சாரம் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 150 ஏக்கர் விளைநிலங்களுக்கு மின்மோட்டார்கள் மூலம் பாசன வசதி நடைபெற்று வருகிறது. இந்த மின்மாற்றி கடந்த ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. இந்த மின்மாற்றியை சரி செய்து தரக்கூறி விவசாயிகள் மின்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கையும் எடுக்காததால் மின்மோட்டார்கள் மூலம்  பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அவலம் நீடித்து வருகிறது. இதனால், 150 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: