சூறைக்காற்றுடன் திடீர் மழை முந்திரி மரங்கள் முறிந்து விழுந்தன

பண்ருட்டி, ஜூன் 7: பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்தது. நள்ளிரவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்தது. ஆனால் பல்வேறு வீடுகளில் இடியால் டிவி, பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் பாதித்தன. சூறாவளி காற்று பலமாக வீசியதால் காடாம்புலியூர், மருங்கூர், நடுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான முந்திரி மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் வேரோடு மரங்கள் சாய்ந்தன. இதனால் முந்திரி விவசாயிகள் பலர் பாதிப்படைந்தனர். இதனால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: