முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

முஷ்ணம், ஜூன் 7:  முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களான முஷ்ணம், நங்குடி, சோழத்தரம், புடையூர், கானூர், மேல்புளியங்குடி, முடிகண்டநல்லூர், கூடலையாத்தூர், ராமாபுரம், நெடுஞ்சேரி, நகரப்பாடி, பேரூர், குணமங்கலம், வடக்கு பாளையம், கார்மாங்குடி, மருங்கூர், தொழுர், கீழப்பாளையூர், பவழங்குடி உள்ளிட்ட 51 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட வருவாய்த் தீர்வாயம் தனித்துணை ஆட்சியர் முத்திரைத்தாள் ஜெயக்குமார் பெற உள்ளார்.  இதில் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் அனைத்து சான்று ஆகியவற்றை பெறுவதற்கு பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்துகொண்டு மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு முஷ்ணம் வட்டாட்சியர் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: