கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு

கடலூர், ஜூன் 7: திமுக பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்வாக வசதிக்காகவும்,  பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் வடக்கு, கம்மாபுரம் தெற்கு மற்றும் கடலூர் தெற்கு ஆகிய 3 ஒன்றியங்கள், கம்மாபுரம் வடக்கு, கம்மாபுரம் மத்திய, கம்மாபுரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் தெற்கு ஆகிய 6 ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட கம்மாபுரம் வடக்கு, கம்மாபுரம் மத்திய, கம்மாபுரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் தெற்கு ஆகிய ஒன்றியங்கள் பின்வரும் ஊராட்சிகள், பேரூர்கள் கொண்டதாக அமையும்.

கம்மாபுரம் வடக்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- 1. மேல்பாதி, 2.பெரியாக்குறிச்சி, 3.கீழ்பாதி, 4.உய்யக்கொண்டராவி, 5.வடக்குசேப்ளாநத்தம், 6.தெற்குசேப்ளாநத்தம், 7.கோட்டகம், 8.மும்முடிசோழகன், 9.வடக்குவெள்ளூர், 10.பழையநெய்வேலி ஆகிய 10 ஊராட்சிகள் மற்றும் கங்கைகொண்டான் பேரூர்.

கம்மாபுரம் மத்திய ஒன்றியம்:  ஊராட்சிகள் - 1.சாத்தமங்கலம், 2.அரசகுழி, 3.ஊ.அகரம், 4.இருப்புக்குறிச்சி, 5.ஊத்தங்கால், 6.ஊ.மங்கலம், 7.காட்டுக்கூனங்குறிச்சி ஆகிய 7 ஊராட்சிகள்.

கம்மாபுரம் தெற்கு ஒன்றியம்:  ஊராட்சிகள் - 1.கோ.மாவிடந்தல், 2.கார்க்குடல், 3.கோ.ஆதனூர், 4.வி.குமாரமங்கலம், 5.கோபாலபுரம், 6.சு.கீணனூர், 7.கம்மாபுரம், 8.சிறுவரப்பூர், 9.கோட்டுமுளை, 10.பெருந்துறை, 11.பெருவரப்பூர், 12.சாத்தாப்பாடி, 13.தர்மநல்லூர், 14.ஊ.ஆதனூர் ஆகிய 14 ஊராட்சிகள்.

கடலூர் கிழக்கு ஒன்றியம்

(குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி), :ஊராட்சிகள் - 1.அன்னவல்லி, 2.சேடப்பாளையம், 3.காரைக்காடு, 4.செம்மங்குப்பம், 5.குடிகாடு, 6.பச்சையாங்குப்பம், 7.அரிசிபெரியாங்குப்பம், 8.கரையேறவிட்டக்குப்பம், 9.ராமாபுரம், 10.வெள்ளக்கரை ஆகிய 10 ஊராட்சிகள்.

கடலூர் மேற்கு ஒன்றியம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: ஊராட்சிகள் 1.சி.என்.பாளையம், 2. நடுவீரப்பட்டு, 3.குமளங்குளம், 4.விலங்கல்பட்டு, - 5.வானமாதேவி, 6.கொடுக்கன்பாளையம், 7.திருமாணிக்குழி, 8. திருவந்திபுரம், 9.பில்லாலி, 10.குணமங்களம் ஆகிய 10 ஊராட்சிகள்.

கடலூர் தெற்கு ஒன்றியம் (கடலூர் சட்டமன்றத் தொகுதி) ஊராட்சிகள் 1.கோண்டூர், 2.தோட்டப்பட்டு, 3.மருதநாடு, 4.வரகால்பட்டு, 5.காராமணிக்குப்பம், 6.பாதிரிக்குப்பம், 7.நத்தப்பட்டு, 8.கடலூர் நான் முனிசிபல் மற்றும் கடலூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 9.வெள்ளப்பாக்கம் ஊராட்சி ஆகிய 9 ஊராட்சிகள்.

கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் 6 பகுதி

களாக பிரிக்கப்பட்ட நிலையில் கட்சியினர் மத்தியில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு உள்ளிட்டவை ஏற்படும் என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: