நீர்நிலைகளில் குளிப்பதற்கு தடை

கடலூர், ஜூன் 7: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருப்பினும் ஆர்வ மிகுதியால் தடையை மீறி இறங்கி குளிக்கும் போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக விடுமுறை நாட்களில் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி விளையாடும் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.  எனவே பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கும் படியும், சிறுவர்களையும் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது பள்ளி ஆண்டு விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு ஒத்துழைப்பு நல்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories: