தோட்டத்தில் மோட்டார் திருட்டு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த கல்யானசுந்தரம் மகன் பாலமுருகன்(35). விவசாய வேலை செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் அரசு மானிய திட்டத்தில் மின்மோட்டார் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது மின் மோட்டார் இணைப்பில் இருந்த மூன்று சோலார் பிரேமில் உள்ள 18 சோலார் பேனல்களோடு மொத்த மின் பொருட்களும் திருடு போனது தெரியவந்துள்ளது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனதால் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: