கண்மாயை தூர்வார கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியம், கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அங்குசாமி தலைமையில் புதுக்குளம் கண்மாய் பாசன விவசாயிகள், தேனி கலெக்டரிடம் கண்மாயை தூர்வாரக்கோரி அளித்த மனு அளித்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘கண்டமனூர் அருகே, 60 ஏக்கர் பரப்பளவில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு மழை கலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. கண்மாயில் நீரை தேக்கினால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கண்மாயில் நீரை தேக்குவதன் மூலம் கண்டமனூர், புதுராமச்சந்திராபுரம், ஆத்துக்காடு, ஏழாயிரம்பண்ணை, பொன்னம்மாள்பட்டி, அடைக்கம்பட்டி, தேக்கம்பட்டி, உசிலம்பட்டி, எட்டப்பராஜபுரம், வேலாயுதபுரம், கணேசபுரம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். கண்மாயில் முட்புதர்களை அகற்றி தூர்வாரிட பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் மனு அளித்துள்ளோம். மேலும் பொதுப்பணித்துறை மூலம் இந்த கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

Related Stories: