கருணாநிதி பிறந்த நாளில் 7 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்

திருச்செங்கோடு, ஜூன் 6: கருணாநிதி பிறந்தநாளையொட்டி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தங்கமோதிரம் அணிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழாவையொட்டி, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்படும் என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 3ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு, மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்று, அரசு மருத்துவனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார். மேலும், ஆய்த்த ஆடைகள் மற்றும் பால்-பழம், ரொட்டி ஆகியவற்றை வங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், நகர அவைத்தலைவர் முரசொலி முத்து, வக்கீல் சுரேஷ்பாபு, நகர்மன்ற  உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் நகர திமுக சார்பில், திமுக கொடியேற்றி அண்ணா, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தங்கமோதிரம் அணிவித்தார். மேலும், பால்-பழம், ரொட்டி உள்ளிட்டவர்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் தனராசு, வேலூர் நகர செயலாளர் முருகன், பேரூராட்சித் தலைவர் லட்சுமிமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விதைப்பண்ணை

விவசாயிகளுக்கு பயிற்சிதிருச்செங்கோடு, ஜூன் 6: மல்லசமுத்திரம் வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், செம்பாம்பாளையம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் தனம் தலைமை தாங்கி, விதை பண்ணை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள், சான்று அட்டைகள் மற்றும் சான்று அட்டையின் நோக்கம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி செயல் விளக்கம் அளித்தார். மேலும், விதைச்சான்று அலுவலர் தமிழரசன் கலந்து கொண்டு, நிலக்கடலை பயிரில் புதிய ரகங்கள், அதன் தன்மைகள், மகசூல் விபரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சித்திரைச்செல்வி, உதவி விதை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. உதவி அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் சத்யமூர்த்தி, வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: