மரக்கன்று நடும் விழா

ராசிபுரம், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ராசிபுரம் நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் சங்கர் தலைமை வகித்து பேசினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரும், கவுன்சிலருமான விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் அமிர்தலிங்கம், நகர துணை செயலாளர் ஆனந்தன், அரசு வழக்கறிஞர் சரவணன், நகரமன்ற உறுப்பினர்கள் சர்மிளா, பழனிசாமி, பிரபு, சண்முகம், பழனியப்பன் மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: