மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

போச்சம்பள்ளி, ஜூன் 6: காவேரிப்பட்டிணம் ஒன்றிய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்க மாநாடு அரசம்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிக்கு ஒன்றிய பொருளாளர் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தார். மாதன், ஆறுமுகம், முருகன், ரமேஷ், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெண்ணிலா வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணை தலைவர் திருப்பதி, வட்ட செயலாளர் தாமு, வட்ட பொருளாளர் சின்னராஜ், கவுன்சிலர் கடல்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மாதந்திர பராமரிப்பு தொகை ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories: