தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தர்மபுரி, ஜூன் 6:  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநில சிறப்பு தலைவரும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்முடி மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று தர்மபுரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாபுசுந்தரம் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சுப்ரமணியன், ராதாகிருஷ்ணன், எழிலரசன் முன்னிலை வகித்தனர். பாராட்டு பெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, தலைமையாசிரியர்கள் செல்வராஜ், முனீஸ்வரி, எல்லப்பன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். நிகழ்ச்சியில், விழா மலரை முன்னாள் எம்பி., செந்தில் ஆகியோர் இருந்தனர். இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி, ராஜகோபால், ரவி, முனிமாதன், ஆனந்தன் மற்றும், சீனிவாசன், அப்துல்அஜிஸ், கற்பகம், நாகையா, வெங்கடேசன், மாநில துணை தலைவர் மாதேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: