நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தாவர வங்கி

நாகர்கோவில், ஜூன் 6: பொதுமக்கள் வீணாக்க விரும்புகின்ற செடி வகைகளை மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தாவர வங்கி திறக்கப்பட்டது. நாகர்கோவிலில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தாவர வங்கி திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள செடிகள், தாவரங்களை இங்கு வைக்கலாம். தவையுள்ளவர்கள் வங்கியில் இருந்து செடிகளை எடுத்து பயன்படுத்தலாம். பொதுமக்கள் வீணாக்கும் செடி வகைகளை இந்த தாவர வங்கியில் வைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் வகையில் ஒரு ஏற்பாடாக குமரி மாவட்ட கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி வரவேற்றார். ஏசிஎப் மனாசிர் ஹலிமா லோகோ அறிமுகம் செய்தார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் கலந்துகொண்டு தாவர வங்கியை திறந்து வைத்து பேசினார். நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ்  பேசினார். துணை மேயர் மேரி பிரின்சி, மண்டல தலைவர் ஜவஹர், ஹீல் தொண்டு நிறுவன இயக்குநர் சிலுவை வஸ்தியான், பழனியாபிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க பொறுப்பாளர் பென்னட் ஜோஸ் நன்றி கூறினார். தன்னார்வ அமைப்பினர், தனியார் நிறுவனத்தினர் செடிகளை வழங்கினர்.

Related Stories: