மதுபாட்டில் விற்ற 6 பேர் கைது

ரிஷிவந்தியம், ஜூன் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் படி பகண்டை கூட்டு சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையில் போலீசார் அந்தந்த பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகல்குடி கிராமத்தை சேர்ந்த தடியன் மகன் பீமன் (55) என்பவர் வீட்டின் எதிரில் 7 மதுபாட்டில், சின்ன கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மனைவி கோவிந்தம்மாள் (47) என்பவர் வீட்டின் எதிரில் 7 மதுபாட்டில், ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஏழுமலை (46) என்பவர் வீட்டின் எதிரில் 6 மதுபாட்டில், வாணாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஏழுமலை (44) என்பவர் வீட்டின் எதிரில் 6 மதுபாட்டில், ஏந்தல் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (47) என்பவர் வீட்டின் எதிரில் 6 மதுபாட்டில், இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி மஞ்சுளா (42) என்பவர் வீட்டின் எதிரில் 6 மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 38 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: