திமுக தேர்தலில் விருப்ப மனு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட 15வது திமுக நிர்வாகிகள் பொது தேர்தலுக்கான விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: திமுக தலைமை அறிவுறுத்தலின்படி 15வது அமைப்பு பொது தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் திமுக நிர்வாகிகள் பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் திமுகவினர் ராமநாதபுரம், பாரதி நகர், பீமாஸ் வைஸ்ராய் மகால் கீழ்த்தளத்தில் திமுக பிரதிநிதியும், தேர்தல் ஆணையருமான முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமியிடம் கட்டணம் ரூ.25 செலுத்தி விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 6,7ல் மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் ஒப்படைக்கலாம்.

Related Stories: