இன்று மின்தடை

கமுதி: கமுதி அருகே பேரையூர் மற்றும் வங்காருபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.கமுதி அருகே பேரையூர் மின் பாதையில் மின் பராமரிப்புகள் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பேரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான உலகநடை,ஜெகநாதபுரம், பாக்குவெட்டி, கருங்குளம், மருதங்கநல்லூர், பேரையூர், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இதேபோல் வங்காருபுரம் மின் பாதையில் மின் பராமரிப்பு பணி காரணமாக,வங்காருபுரம், அச்சங்குளம்,மேலக்கொடுமலூர், கீழக்கொடுமலூர், டி.புனவாசல், செய்யாமங்கலம், தரைக்குடி, வல்லக்குளம் ஆகிய பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: