கீழ்புளியங்குடி அருகே கிடப்பில் பாலப்பணி

முஷ்ணம், ஜூன் 6: முஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முஷ்ணம் கள்ளிப்பாடி செல்லும் சாலை அருகே கீழ்புளிங்குடியில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தது. மழைக்காலங்களில் வக்காரமாரி கலுங்கு ஏரி உபரிநீர் சாலையை கடந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பல ஆண்டாக இந்த அவலம் நீடித்ததால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக பாலம் அமைக்கும் வகையில், தரைப்பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்றது. ஆனால் பணிகள் முழுமையாக நடைபெறாமல் நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கிராமபுற பேருந்து வருவதில்லை.  இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்னர். இந்த சாலையில் கள்ளிப்பாடி, பூண்டி, இனமங்கலம், புத்தூர், அம்பபுஜவள்ளிப்பேட்டை, முஷ்ணம் ஒன்றியத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊராட்சிகளான காவனூர், பவழங்குடி, கீரனூர், மரங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தோர் முஷ்ணத்திற்கு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு வந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணியை ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பொறியாளர் தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: