மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தொழுதூர், ஜூன் 6: தொழுதூர் அடுத்த வீ சித்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ திருவிழா  நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலாவும் நடந்து வந்தது. 6ம் நாள் திருவிழாவில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 7ம் நாள் திருவிழாவாக திருபல்லக்கில் அம்மன் திருக்கோலமும், புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகை வேல்முருகன், தர்மகர்த்தா பழனிவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: