கரும்பில் நோய் தாக்குதல்

குறிஞ்சிப்பாடி, ஜூன் 6: கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி வட்டங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர். தற்போது கரும்பு பயிரில் இலைகள் சுருண்டும் காய்ந்தும் போக்கோ போகிங் என்ற நோய் பரவலாக தாக்கி வருகிறது. இது குறித்து கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் சசிகுமார் கூறுகையில், கரும்பு பயிரில் இளம் இலைகள் சுருக்கம் அடைந்து வளர்ச்சி குன்றி காணப்படுவதாக கரும்பு அலுவலர் பொன்னுரங்கம் மற்றும் குழுவினர் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகளிடம் தெரிவித்தனர்.தொடர்ந்து உதவி பேராசிரியர்கள் திருமுருகன், தங்கேஸ்வரி, அனிதா ஆகியோர் சேர்ந்த குழு கரும்பு வயலில் ஆய்வு செய்ததில் கரும்பு பயிரானது பொக்கோ போயிங் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. போக்கோ போயிங் நோய், புசோரியம் என்ற பூசணத்தால் உருவாகிறது.

இவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு கார்பன்டாசிம் 1 கிராம் (அல்லது) மேன்கோசெப் 3 கிராம் என்ற அளவில் பூசணக் கொல்லி மருந்துகளை ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கவும். நோய் தாக்கப்பட்ட கரும்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

Related Stories: