தடுப்பணை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா

கடலூர், ஜூன் 6: கடலூர் மாவட்டத்திலுள்ள தடுப்பணை பகுதியில் 5,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட நீர்வளத்துறை மேற்கொண்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து நீர்நிலை அணைக்கட்டு பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய நிலையில் மரக்கன்றுகள் நடும் பணியை கடலூர் மாவட்ட நீர்வளத்துறை மேற்கொண்டுள்ளது. விருதாச்சலம் வெள்ளாறு வடிநில கோட்டம் ஏற்பாட்டின் பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அணைக்கட்டு கரையோரம் 5,000 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. மாவட்ட நீர்வளத் துறையின் செயற்பொறியாளர் பாஸ்கர் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமையில் பண்ருட்டி திருவதிகை, கடலூர் திருவந்திபுரம் உள்ளிட்ட அணைக்கட்டு பகுதியில் முதல்கட்டமாக மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்துக்கு உட்பட்ட 14 உதவி பொறியாளர்கள் மற்றும் நீர்வளத் துறையின் அலுவலர்கள், கிராம மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள அனைத்து கிராம சாலை ஓரங்களில் நடவு செய்ய இருப்பதாக நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதவி பொறியாளர் விமல், சாலை ஆய்வாளர் மணிமாறன் மற்றும் சாலை பணியாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து மரக்கன்றுகளை நட்டனர்.

Related Stories: