சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

கடலூர், ஜூன் 6: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்துரு (20), எலக்ட்ரிசீயன். இவருக்கும் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவி ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி அரசு பொது தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை, திடீரென காணவில்லை. இதனால் பதறிய பெற்றோர், மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை.இது குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவியை சந்துரு ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.

Related Stories: