கட்டிட தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

கடலூர், ஜூன் 6: தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தலைவர் சிங்காரம், அரியலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் அஞ்சாப்புலி வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன், கடலூர் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் முத்தையன், மாநில பொருளாளர் ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இயற்கை மரணம், சாலை விபத்து, ஐடிஐ, பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மகப்பேறு ஆகியவற்றிற்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்தவேண்டும். தொழில்நுட்ப பட்ட மேற்படிப்புக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: