கலைஞர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

நாமக்கல், ஜூன்4: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு  மகளிர் கலைக்கல்லூரி நடைபெற்றது. போட்டியில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி 12 தலைப்புகளில் மாணவர்கள் பேசினர்.

துறைத்தலைவர் சர்மிளா பானு பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்து பேசினார். போட்டியில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் மோகன்ராஜ் முதல் பரிசும், குமாரபாளையம் ஜே,ஜே,கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் புகழேந்தி 2ம் இடமும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி பத்மா 3ம் இடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹5000, இரண்டாம் பரிசு ₹3000, மூன்றாம் பரிசு ₹2000க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

போட்டிக்கு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கந்தசாமி, சந்திரசேகரன், நல்லுசாமி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். போட்டி ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: