கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமை வகித்து, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பர்கூர் எம்எல்ஏ மதியழகன், முன்னாள் எம்பி வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, நிர்வாகிகள் அஸ்லம், நாகராஜ், தனசேகரன், ராஜா, பன்னீர்செல்வம், பரந்தாமன், டேம்.பிரகாஷ், வஜீர், குப்புசாமி, செந்தில்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் திமுக கொடியேற்று விழா, அன்னதானம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், திமுக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர் வேலாயுதம், குணசேகரன், ஷாஜகான், விஜயன், அண்ணாதுரை, மீன் ராஜா, குமரேசன், சீனிவாசன், பாபு, மகளிரணி கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி ஒன்றியம், கோட்டப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கீதாகோவிந்தசாமி தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தட்ரஅள்ளியில் மாவட்ட சேர்மன் மணிமேகலைநாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் முன்னிலையில் நடந்தது. போச்சம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையிலும், பாளேகுளியில் ஊராட்சி மன்ற தலைவர் மாதவிமுருகசன் தலைமையிலும், எருமாம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் விமலாபெரியசாமி தலைமையிலும், கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சந்தூர் கூட்ரோடு பகுதியில் இளைஞரணி அமைப்பாளர் பழனி தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கொடி ஏற்றி வைத்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சங்கர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகே, திமுக கொடியேற்றி, கருணாநிதியின் உருவ படத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், மலர் தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். பேரூர் செயலாளர் பாபு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, பொதுக்குழு ராஜன், திமுக பிரமுகர் சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: