அரூர் பேரூராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவக்கம்

அரூர், ஜூன் 4: அரூர் பேரூராட்சி சார்பில், தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. இதனையொட்டி, பொதுமக்கள் பங்கேற்புடன் தீவிர துப்புரவு பணிகள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய விழிப்பணர்வு ஊர்வலம் கடைவீதி, பேருந்து நிலையம், பைபாஸ் சாலை வழியாக சென்றது. அப்போது நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பேரூராட்சி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பேரணிக்கு பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சூர்யா தனபால், செயல் அலுவலர் கலைராணி, துப்புரவு ஆய்வாளர் சிவகுமார், கவுன்சிலர்கள் முல்லை.ரவி, மகாலட்சுமி, அருள்மொழி, உமாராணி, ஜெயலட்சுமி, பெருமாள், அன்புமணி உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

Related Stories: