வக்கீல் வீட்டு வளாகத்தில் பைக் தீ வைத்து எரிப்பு

தர்மபுரி, ஜூன் 4: தர்மபுரி அருகே வக்கீல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி வெள்ளோலை அருகே வேட்ராயன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ஜீவா(32). இவர் தர்மபுரி மற்றும் கோவையில் வக்கீலாக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம், அவர் தர்மபுரி நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார்.

வழக்கம்போல் தனது பைக்கை, வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் சுமார் 12 மணிக்கு சத்தம் கேட்டு, ஜீவாவின் தந்தை பரமசிவம் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன் நிறுத்திருந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடினர். உடனடியாக தண்ணீர் ஊற்றி, அவர் தீயை அணைக்க முயன்றார்.ஆனால், அதற்குள் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து ஜீவா அளித்த புகாரின் பேரில், மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பைக்கை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: