அடிக்கல் நாட்டுவிழா

சிதம்பரம், ஜூன் 2:  சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளை சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர் செல்வம், பேரூர் செயலாளர்கள் மாரிமுத்து, தமிழரசன், நிர்வாகிகள் வசந்த், இளவரசி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: