எசனூர் வெள்ளாற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

முஷ்ணம், ஜூன் 2:  முஷ்ணம் அருகே எசனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஏற்கனவே பலமுறை அரசு மணல் குவாரி செயல்பட்டு லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது வெள்ளாற்றை ஆக்கிரமித்து ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் கால்நடை மற்றும் மனிதர்கள் தவறி விழுந்தால் வேலி கருவேல மரங்களால் இடையூறு ஏற்பட்டு மீட்கமுடியாத நிலை ஏற்படும். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆற்றில் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளாற்றின் பெரு வெள்ளத்தால் விவசாயிகளின் விளைநிலங்கள் அடித்து செல்லப்பட்டது. விளை நிலங்களில் மணல் புகுந்தும், பயிர் செய்ய இயலாத நிலையில் உள்ளது. மேலும் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் ஆற்றின் பக்கவாட்டு சுவர் மற்றும் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: