தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்

தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள  அறிக்கை: மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர்கள்  கேசவவிநாயகம், நயினார்நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் வழிகாட்டுதல்படி  மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலாபுஷ்பா  ஆகியோரின் ஒப்புதலோடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர்கள்,  பொதுச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி மாவட்ட துணை தலைவர்களாக வழக்கறிஞர்  எஸ்.பி.வாரியர், சிவராமன்,  தங்கம், சரஸ்வதி, பல்க்பெருமாள், செல்வராஜ்,  சுவைதர், ரேவதி, மாவட்ட பொதுச்செயலாளர்களாக சிவமுருகஆதித்தன்,  ராஜா, சத்தியசீலன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட  செயலாளர்களாக சங்கர், வீரமணி, ராஜபுனிதா, ஆண்டாள், அர்ஜூன்பாலாஜி,  கனல்ஆறுமுகம், ராமகனி, பாப்பா, மாவட்ட பொருளாளராக  சண்முகசுந்தரமும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: