பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா

நாசரேத், மே 28: பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் 123வது பிரதிஷ்டை விழா, கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிரதிஷ்டையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளானோருக்கு அசன விருந்து வழங்கப்பட்டது.

இன்று (28ம் தேதி) வாலிப ஆண்கள் மற்றும் பெண்கள் பண்டிகை நடக்கிறது. திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜோசப் ஜேசன் அருட்செய்தி அளிக்கிறார். இரவு 9 மணிக்கு வாலிபர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (29ம் தேதி) காலை 8 மணிக்கு பாடகர் ஞாயிறும், இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் நடக்கிறது. ஜூலியஸ் ரிச்சர்டுசிங் செய்தி அளிக்கிறார்.

ஏற்பாடுகளை சேகர தலைவர் ஆல்வின்ரஞ்சித்குமார், ஆலய அசனகமிட்டி தலைவர் ராபின்சன், உபதலைவர் ஞானையா, செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் பொன்செல்வன், பொருளாளர் கோல்டன் பிரபு, இணை பொருளாளர் ஜோஷ்வா, சேகர செயலர் அதிசயம், பொருளாளர் பாஸ்கரன், எல்சிஎப் செயலாளர் ஞானசிங், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் திலகர், ஷம்மா, சபை ஊழியர்கள் டேனியல், டென்சிங் மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்துள்ளனர்.

Related Stories: