தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (29ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நான்(கீதாஜீவன்) சிறப்புரை ஆற்றுகிறேன். கூட்டத்தில், ஜூன்3ம் தேதி கலைஞர் பிறந்த நாள் விழா குறித்தும், சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: