தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு

குளத்தூர், மே 28: சூரங்குடி அடுத்த கே.தங்கம்மாள்புரத்தில் உள்ள நீராவி குடிநீர் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கிராம மக்கள், மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அக்கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மார்க்கண்டேயன் எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கண்மாயை சுற்றி சுவர் அமைக்க ஆலோசனை மேற்கொண்டு விரைவில் பணிகள் துவக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

தொடர்ந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அப்போது விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் பால்பாண்டியன், விளாத்திகுளம் பேரூர் வார்டு செயலாளர் லெனின், கிளை செயலாளர்கள் சரவணப்பெருமாள், சங்கிலிகருப்பசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற சமூக வலைதள பொறுப்பாளர் தர், சிறுபான்மையினர் நல அமைப்பாளர் தர்மநேசசெல்வின், கிழக்கு ஒன்றிய மாணவரனி துணை அமைப்பாளர் கரண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: