உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்

உடன்குடி, மே 28: உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உடன்குடி யூனியனில் பழுதான  அனைத்து ரோடுகளும் கணக்கிடப்பட்டு பெரும்பாலான சாலை பணி விரைந்து நடந்து  வருகிறது. தற்போது தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்  2021-22 திட்டத்தின் கீழ் உடன்குடி யூனியன் 1வது வார்டு  மானாடு- சோலைகுடியிருப்பு ரோடு மராமத்து பணி செய்வதற்கு ரூ.21 லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சீர்காட்சி பத்ரகாளியம்மன்  கோயில் ரோடு பணிக்கு ரூ.22 லட்சத்து 89 ஆயிரம்,  குலசை- தாண்டவன்காடு- பெரியபுரம் சாலை பணிக்கு ரூ.49 லட்சத்து  23 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கப்பட உள்ளது.  உடன்குடி யூனியனில் சம்பந்தப்பட்ட அனைத்து ரோடுகளும் புதுப்பிக்கப்பட்டு  வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்படும். இவ்வாறு  கூறியுள்ளார்.

Related Stories: