மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

உடன்குடி, மே 28: உடன்குடி  யூனியனுக்குட்பட்ட மெஞ்ஞானபுரத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில்  சாத்தான்குளம் -உடன்குடி இணைப்பு சாலை, பேவர்பிளாக் சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் பணிகள் முடிந்து திறப்பு விழா, யூனியன் சேர்மன் பாலசிங்  தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மீராசிராஜூதீன், பேரூராட்சி  துணை தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், பிடிஓ  பொற்செழியன் முன்னிலை வகித்தனர்.

பஞ். தலைவர் கிருபாராஜாபிரபு  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேவர்பிளாக் சாலையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மெஞ்ஞானபுரம் பஞ்.  துணை தலைவர் செந்தில்முருகன், உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர்  அஸ்ஸாப்கல்லாசி, செட்டியாபத்து பஞ். தலைவர் பாலமுருகன், மாவட்ட  அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளரணி மகாவிஷ்ணு,  மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தகஅணி ரவிராஜா, இளங்கோ, மாணவரணி அலாவுதீன்,  மணப்பாடு ஜெயப்பிரகாஷ், மாணவரணி ராஜாபிரபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள்  பாய்ஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், வார்டு செயலாளர் ஜெரால்டு, எள்ளுவிளை  செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: